/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுார் அருகே சுடுகாட்டு பிரச்னை
/
ப.வேலுார் அருகே சுடுகாட்டு பிரச்னை
ADDED : அக் 16, 2025 01:27 AM
ப.வேலுார், ப.வேலுார் அருகே, வெங்கரை டவுன் பஞ்.,க்குட்பட்ட திட்டமேடு மற்றும் கள்ளிபாளையத்தை சேர்ந்த கிராம மக்களிடையே சுடுகாட்டு பிரச்னை இருந்து வந்தது. இரு தரப்பினரையும், கடந்த செப்., 24ல் பேச்சுவார்த்தைக்கு, தாசில்தார் கோவிந்தசாமி அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால், ப.வேலுார் இன்ஸ்பெக்டர் சிவகுமார், 'இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். இதுநாள் வரை நடைமுறையில் உள்ளபடியே சுடுகாட்டை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தினார்.
இந்நிலையில், ஒரு தரப்பினர் சுடுகாட்டை சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்பி உள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே மீண்டும் பிரச்னை வெடித்தது. இந்நிலையில், நேற்று இரவு, மர்ம நபர்கள் சுடுகாட்டு சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்த திட்டமேடு பகுதி மக்கள், அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதிக்கு சென்ற, ப.வேலுார் தாசில்தார் குழந்தைசாமி, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீண்டும் இரு தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் னெ, தெரிவித்ததால், மக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.