/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க கலெக்டர் ஆய்வு
/
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்க கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 16, 2025 01:27 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
சட்டசபை, லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லுாரிக்கு எடுத்துச்செல்லப்படும். அங்கு, ஓட்டு எண்ணிக்கை நாளன்று, தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதுவழக்கம்.
பாதுகாப்பு மற்றும் ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களின் போக்குவரத்து வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நாமக்கல் அரசு சட்ட கல்லுாரியில் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதையொட்டி, கலெக்டர் துர்கா மூர்த்தி, நாமக்கல் சட்ட கல்லுாரிக்கு சென்று ஆய்வு செய்தார். அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.