/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளைஞர் எழுச்சி தின விழிப்புணர்வு பேரணி
/
இளைஞர் எழுச்சி தின விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 16, 2025 01:28 AM
நாமக்கல், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, நேற்று நாமக்கல்லில் இளைஞர் எழுச்சி தினம் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மோகனுார் சாலை, மணிக்கூண்டு, பழைய அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், என்.எஸ்.எஸ்., மாவட்ட திட்ட அலுவலர் ராமு, எஸ்.ஐ.,க்கள் குணசிங், வெங்கடேசன் உள்ளிட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்
பங்கேற்றனர்.