sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்

/

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம்


ADDED : செப் 05, 2025 01:15 AM

Google News

ADDED : செப் 05, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல்லில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரின், இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நீடித்தது. இதனால், பல்வேறு சான்றிதழ்களை பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து, வாரத்திற்கு 2 முகாம்கள் மட்டுமே நடத்த வேண்டும்.

மேலும் இத்திட்ட பணிகளை மேற்கொள்ள உரிய காலஅவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட, 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

வேலைநிறுத்த போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் தாசில்தார் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வருவாய்த்துறை தொடர்பான பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை, பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us