ADDED : செப் 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல் :நாமக்கல், முதலைப்பட்டிபுதுார் நியு சத்யாநகரில் வசித்து வருபவர் செல்வராஜ், 55, கட்டட மேஸ்திரி. இவரது மாமனார் ரங்கராஜன் கடந்த, 30ம் தேதி ஊட்டி பந்தலுாரில் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதை தொடர்ந்து, செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு துக்க வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று அதிகாலை குடும்பத்துடன் நாமக்கல் திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.இது குறித்து அவர், நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.