/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஏரி நீர் வெளியேறும் கால்வாய் அடைப்பு வயல்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம்
/
ஏரி நீர் வெளியேறும் கால்வாய் அடைப்பு வயல்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம்
ஏரி நீர் வெளியேறும் கால்வாய் அடைப்பு வயல்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம்
ஏரி நீர் வெளியேறும் கால்வாய் அடைப்பு வயல்களில் புகுந்ததால் நெற்பயிர் சேதம்
ADDED : நவ 13, 2025 03:19 AM
வெண்ணந்துார்: ஏரி நீர் வெளியேறும் கால்வாயை தனிநபர்கள் அடைத்து வைத்-துள்ளதால், அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்து நெற் பயிர்கள்
சேதமடைந்துள்ளன.
வெண்ணந்துார் யூனியன், அக்கரைப்பட்டி பஞ்.,க்குட்பட்ட அக்க-ரைப்பட்டி ஏரி, 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது.இந்த ஏரிக்கு சேலம் பகுதியில் இருந்து திருமணிமுத்தாறு கால்வாய் மூலம் மழைநீர் வந்து சேர்கிறது. சில நாட்களுக்கு முன், சேலம், நாமக்கல் பகுதியில் பெய்த தொடர் மழையால், அக்கரைப்பட்டி ஏரி தன் முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில், ஏரி நீர் வெளியேறும் கால்வாய்களை தனி நபர்கள் அடைத்து வைத்துள்ளதால், தண்ணீர் செல்ல வழியின்றி அக்க-ரைப்பட்டி வயக்காடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வயலில் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
அக்கரைப்பட்டி ஏரியை நம்பி தான், சுற்றுவட்டார விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது, இந்த ஏரியில் தனி நபர்கள் மீன்குஞ்சுகளை வளர்த்து வருகின்றனர்.
தண்ணீர் வெளியேறாமல் இருக்க, கால்வாய்களை அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் ஏரி நீர் வெளியேற வழியின்றி, அருகில் உள்ள வயல்-களில் புகுந்ததால், நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. வேளாண்மை, வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமான வயல்-களை பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி நீர் வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

