/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மா.கம்யூ., கட்சி மாவட்ட குழு கூட்டம்
/
மா.கம்யூ., கட்சி மாவட்ட குழு கூட்டம்
ADDED : நவ 13, 2025 03:18 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில் நடந்த, மா.கம்யூ., கட்சியின் மாவட்ட குழு கூட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி தலைமை வகித்தார். இதில், எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். 100 நாள் வேலை திட்டம், அனைத்து கிரா-மங்களுக்கும் வழங்க வேண்டும். எலச்சிபாளையத்தில் தேசிய வங்கி துவங்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கூடுதல் போலீசார் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலகுழு உறுப்பினர் டில்-லிபாபு, மாவட்ட செயலாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

