/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை மறியலில் ஈடுபட்ட 185 மா.திறனாளிகள் கைது
/
சாலை மறியலில் ஈடுபட்ட 185 மா.திறனாளிகள் கைது
ADDED : நவ 12, 2025 01:14 AM
நாமக்கல், உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நாகேஸ்வரி, பொருளாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற மாநிலங்களை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை, 6,000 ரூபாயும், அதிகம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, 10,000 ரூபாயும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, 15,000 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோஷம்
எழுப்பினர்.
திடீரென, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட, 115 ஆண்கள், 70 பெண்கள் என மொத்தம், 185 மாற்றுத்திறனாளிகளை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

