/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மீன் கடை அமைக்க எதிர்ப்பு பொது மக்கள் சாலை மறியல்
/
மீன் கடை அமைக்க எதிர்ப்பு பொது மக்கள் சாலை மறியல்
ADDED : அக் 24, 2024 01:19 AM
மீன் கடை அமைக்க எதிர்ப்பு
பொது மக்கள் சாலை மறியல்
பள்ளிப்பாளையம், அக். 24-
பள்ளிப்பாளையத்தில், திருச்செங்கோடு செல்லும் சாலையில் ஆர்.எஸ்., வளைவு அருகே சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிரே நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.
இந்த இடத்தில், நேற்று சிலர் மீன் கடை நடத்த, 'செட்' அமைக்க கட்டுமான பொருட்களை கொண்டு வந்து இறக்கினர். இதையறிந்த அப்பகுதி கவுன்சிலர் வினோத்குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மீன் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு, மீன் கடை அமைக்க வந்தவர்கள், 'அரசு அனுமதி உள்ளது; மீன் கடை அமைப்போம்' என, தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள், திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், 'இந்த இடத்தில் மீன் கடை அமைக்க கூடாது. லாரியில் கொண்டு
வந்த கட்டுமான பொருட்களை திருப்பி எடுத்துச்செல்ல வேண்டும்' என, தெரிவித்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, மீன் கடை அமைக்க போலீசார் தடை
விதித்தனர்.
இதையடுத்து, கட்டுமான பொருட்களை திருப்பி எடுத்துச்சென்றனர். இதனால் மதியம், 3:00 மணி முதல், 4:00 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.