/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை பாதுகாப்பு மாத விழா துவக்கம்
/
சாலை பாதுகாப்பு மாத விழா துவக்கம்
ADDED : ஜன 02, 2026 05:01 AM

நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்று துவங்கியது.
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜன.,1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதன் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று, நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், பதுவைநாதன், மோகனபிரியா ஆகியோர் தலைமை வகித்தனர். தொடர்ந்து பொதுமக்கள், டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பஸ்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டியும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில், சக்திவேல், பிரபாகரன், செல்வகுமார், உமா மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

