/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குற்றச்செயல்கள் அதிகரிப்பு புறக்காவல் நிலையம் தேவை
/
குற்றச்செயல்கள் அதிகரிப்பு புறக்காவல் நிலையம் தேவை
குற்றச்செயல்கள் அதிகரிப்பு புறக்காவல் நிலையம் தேவை
குற்றச்செயல்கள் அதிகரிப்பு புறக்காவல் நிலையம் தேவை
ADDED : ஜன 02, 2026 05:01 AM
பள்ளிப்பாளையம்: கீழ்காலனி பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதால், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம் அருகே கீழ்காலனி பகுதியை சுற்றிலும் தாஜ்நகர், எஸ்.பி.பி., காலனி, கிழக்குதொட்டிபாளையம், விளாங்காட்டூர், வெள்ளிக்குட்டை, அண்ணாநகர், ஐந்துபனை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. கீழ்காலனி பகுதியில் இருந்து மூன்று பிரதான சாலைகள் பிரிவதால், இந்த பகுதி மையமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.இப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால், குடிமகன்களின் அட்டகாசம் எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். கடந்த ஒரு மாதமாக எஸ்.பி.பி., காலனி, கீழ்காலனி பகுதியில் தொடர்ந்து திருட்டு நடந்து வருகிறது. இரவு நேரத்தில் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, குற்றச் செயல்களை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பு கருதியும், இப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

