/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: 4 பேர் கைது
/
ரியல் எஸ்டேட் அதிபரிடம் வழிப்பறி: 4 பேர் கைது
ADDED : அக் 27, 2024 04:03 AM
பள்ளிப்பாளையம்: வெண்ணந்துாரை சேர்ந்தவர் தனபால், 23; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஈ-காட்டூர் பகுதியில் நிலம் பார்க்க, 'ஆம்னி' காரில் சென்றார்.
அப்போது, 4 பேர் ஆம்னி காரை வழிமறித்து தனபாலை தாக்கி அவரிடம் இருந்து, 25,000 ரூபாய், 40,000 மதிப்புள்ள மொபைல் போனை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து தனபால் அளித்த புகார்படி, வெப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இளம்பிள்ளையை சேர்ந்த கவுதம், 27, திருச்செங்-கோட்டை சேர்ந்த ராகுல், 20, வெப்படை சின்னார்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார், 22, கருங்கல்பாளையத்தை சேர்ந்த பத்ம-நாபன், 25, ஆகிய 4 பேரை போலீசார், நேற்று மாலை கைது செய்து, மொபைல் போன், 10,000 ரூபாயை பறிமுதல் செய்-தனர்.