/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜே.இ.இ., தேர்வில் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி சாதனை
/
ஜே.இ.இ., தேர்வில் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி சாதனை
ADDED : பிப் 15, 2024 12:28 PM
குமாரபாளையம்: குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
குமாரபாளையம் ராயல் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ்- 2 பயிலும் மாணவர்கள், கடந்த ஜன.,ல் நடந்த, ஜே.இ.இ., முதன்மை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில், மாணவர்கள் ஹரேஷ், 99.54 சதவீதம், பாலவிஷ்ணு, 97.57 சதவீதம், கொம்பன் அர்ஜுன், 96.24 சதவீதம், கவின், 95.27 சதவீதம், தேவபிரசாந்த், 91.93 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இந்த மாணவர்கள், என்.ஐ.டி., கல்லுாரியில் சேரவும், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் அன்பழகன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்த், முதல்வர் ராஜஸ்ரீ, அகாடமிக் இயக்குனர் விஜய் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினர்.

