/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு திட்டத்தில் 4, 5ம் கட்ட பணிக்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு
/
நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு திட்டத்தில் 4, 5ம் கட்ட பணிக்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு
நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு திட்டத்தில் 4, 5ம் கட்ட பணிக்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு
நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு திட்டத்தில் 4, 5ம் கட்ட பணிக்கு ரூ.103 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 21, 2025 08:02 AM
நாமக்கல்: ''நாமக்கல் அவுட்டர் ரிங் ரோடு திட்டத்தில், 4, 5ம் கட்ட பணிக்கு, தமிழக அரசு, 103 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது,'' என, எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.
நாமக்கல மாநகராட்சிக்கு உட்பட்ட, திருச்சி சாலை, பொன்விழா நகரில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை மேம்பாட்டு பணி துவக்க விழா நடந்தது. எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், 2022ல், நாமக்கல் - சேலம் சாலையில் இருந்து சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை, திருச்சி சாலை, மோகனுார் சாலை வழியாக, மதுரை புறவழிச்சாலையை இணைக்கும், 20 கி.மீ., துாரத்திற்கு, 'அவுட்டர் ரிங் ரோடு' அமைக்க உத்தரவிட்டார். இதன் மொத்த மதிப்பு, 411 கோடி ரூபாய். முதல் கட்டமாக, சேலம் மெயின் சாலையில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் வரை பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, பஸ் ஸ்டாண்டில் இருந்து வேட்டாம்பாடி வரை சாலை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
மரூர்ப்பட்டி அருகே, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 3ம் கட்டமாக, வேட்டாம்பாடியில் இருந்து திருச்சி சாலை வேப்பணம் வரை சாலை அமைக்கும் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. இந்நிலையில், 4, 5ம் கட்டமாக, திருச்சி சாலையில் இருந்து, மோகனுார் சாலை வரையும், 5ம் கட்டமாக, மோகனுார் சாலை லத்துவாடியில் இருந்து, பரமத்தி சாலையில் தொட்டிப்பட்டி அருகே, மதுரை புறவழிச்சாலையை இணைக்கும் பணியும் நடக்க உள்ளது.
இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அனுமதி அளித்து, 10 கி.மீ., துாரம் உள்ள இந்த பணிக்கு, 103 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.