/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ரூ.2.46 லட்சம் உண்டியல் காணிக்கை
/
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ரூ.2.46 லட்சம் உண்டியல் காணிக்கை
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ரூ.2.46 லட்சம் உண்டியல் காணிக்கை
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் ரூ.2.46 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED : ஆக 07, 2025 01:14 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் கண்ணனுார் மாரியம்மன் கோவில் உண்டியலில், 2.46 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் பிரசித்தி பெற்ற கண்ணனுார் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆடி, 18ல் திருவிழா நடக்கும். நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபடுவர். போக்குவரத்து வசதி இல்லாத காலகட்டங்களில் கூட, வெளியூர்களிலிருந்து மாட்டு வண்டிகளில் ஏராளமானோர் வந்து, இங்கேயே தங்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளனர்.
அதன்படி, இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா, மூன்று நாட்கள் சிறப்பாக நடந்தது. நேற்று, கோவில் உண்டியல்களை, அறநிலையத்துறை கோவில் செயலாளர் குணசேகரன், குமாரபாளையம் சரக ஆய்வாளர் வடிவுக்கரசி மற்றும் கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், தற்காலிக உண்டியலில், 24,589 ரூபாய், -நிரந்தர உண்டியலில், இரண்டு லட்சத்து, 22,402 ரூபாய் என, மொத்தம், இரண்டு லட்சத்து, 46,991 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.