/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோவில் காளை உயிரிழப்பு பூஜைகளுடன் நல்லடக்கம்
/
கோவில் காளை உயிரிழப்பு பூஜைகளுடன் நல்லடக்கம்
ADDED : ஆக 07, 2025 01:14 AM
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் அருகே, கோலாரம், கருக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், கடந்த, 22 ஆண்டுகளாக இருந்த கோவில் காளை, கடந்த, 4 மாலை, 6:30 மணிக்கு வயது மூப்பின் காரணமாக இறந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு கோவில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு காளை மாட்டிற்கு சிறப்பு பூஜை செய்தனர்.
தொடர்ந்து, கோவில் அருகே குழி தோண்டி திருநீறு, உப்பு, திருமஞ்சனம், சிகப்பு, சந்தனம், சில்லறை காசுகள், திருநாமம் உள்ளிட்டவற்றை துாவி பக்தர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த காளை, கடந்த, 2003 ஆடி, 19ல், பிறந்தது. பிறந்த நாளிலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.