/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டிச., 5, 6ல் மாநில 'கலைத்திருவிழா' ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு
/
டிச., 5, 6ல் மாநில 'கலைத்திருவிழா' ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு
டிச., 5, 6ல் மாநில 'கலைத்திருவிழா' ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு
டிச., 5, 6ல் மாநில 'கலைத்திருவிழா' ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு
ADDED : நவ 24, 2024 01:03 AM
டிச., 5, 6ல் மாநில 'கலைத்திருவிழா'
ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கீடு
நாமக்கல், நவ. 24-
நாமக்கல் மாவட்டத்தில், வரும், டிச., 5, 6ல், மாநில அளவலான கலைத்திருவிழா நடக்கிறது. அதற்காக, 37 லட்சம் ரூபாய் நிதியை, பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25ம் ஆண்டில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி, குறுவள, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான, 'கலைத்திருவிழா' போட்டி நடந்து முடிந்துள்ளது.
அதையடுத்து, மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவர்களை கொண்டு, மாநில அளவிலான போட்டி, வரும், டிச., 1ல் துவங்கி, 6 வரை, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் என, நான்கு மாவட்டங்களில் நடக்கிறது. அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வரும் டிச., 3ல், கோவையிலும், 6 முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 4ல், திருப்பூரிலும் நடக்கிறது.
மேலும், ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், டிச., 5, 6ல், ஈரோட்டிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும், டிச., 5, 6ல், நாமக்கல் மாவட்டத்திலும் நடக்கிறது. போட்டிகளை நடத்துவதற்கு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனித்தனி அமைப்புக்குழு ஏற்படுத்தப்பட உள்ளது. இக்குழு, போட்டிகள் நடத்துவதற்கான இடம், நடுவர் குழு தேர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு, நாமக்கல் மாவட்டத்திற்கு, 37 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.