தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/இன்று ஆர்எஸ்எஸ். பேரணி: எஸ்பி., ஆய்வு

இன்று ஆர்எஸ்எஸ். பேரணி: எஸ்பி., ஆய்வு

இன்று ஆர்எஸ்எஸ். பேரணி: எஸ்பி., ஆய்வு


ADDED : அக் 25, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:தமிழகம் முழுவதும், இன்று, நாளை, நவ., 1ல் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இதையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு எந்தவித தடையும் இல்லை என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, முதல் பேரணி, இன்று மதியம், 3:00 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது.நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கி பொய்யேரிக்கரை சாலை, பரமத்தி சாலை, பெரியப்பட்டி சாலை, சந்தைப்பேட்டைபுதுார், பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை வழியாக மீண்டும் பூங்கா சாலையில் பேரணி நிறைவடைகிறது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பேரணியில், அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, பொதுமக்களின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், நேற்று பூங்கா சாலை உள்ளிட்ட பேரணி நடக்கும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us