ADDED : அக் 25, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
மோகனுார்:மோகனுார்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில், டெங்கு
விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை வட்டார மருத்துவ அலுவலர்
கலைச்செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம்
வரை சென்று நிறைவடைந்தது.இதில், பங்கேற்ற மாணவ, மாணவியர் டெங்கு
விழிப்புணர்வு பற்றிய வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தியும், துண்டு
பிரசுரம் வினியோகத்தவாறு சென்றனர். முடிவில் டெங்கு உறுதி மொழி
எடுக்கப்பட்டது. தாசில்தார் வசந்த், அரசு ஆரம்ப நிலைய டாக்டர்
சண்முகம், ரெங்கேஸ்வரா கல்வி நிறுவன தாளாளர் சுப்பரமணியன்,
சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
