/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்.டி.ஓ., எச்சரிக்கையை மீறி சாயக்கழிவு நீர் வெளியேற்றம்
/
ஆர்.டி.ஓ., எச்சரிக்கையை மீறி சாயக்கழிவு நீர் வெளியேற்றம்
ஆர்.டி.ஓ., எச்சரிக்கையை மீறி சாயக்கழிவு நீர் வெளியேற்றம்
ஆர்.டி.ஓ., எச்சரிக்கையை மீறி சாயக்கழிவு நீர் வெளியேற்றம்
ADDED : டிச 11, 2024 01:38 AM
பள்ளிப்பாளையம், டிச. 11-
பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில், நேற்று முன்தினம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில், சாயக்கழிவுநீர் தடுப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 14 துறை அதிகாரிகளும், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சாய ஆலை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 'விதிமீறி சாயக்கழிவுநீரை வெளியேற்றினால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆர்.டி.ஓ., சுகந்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரது உத்தரவை காற்றில் பறக்கவிடும் வகையில், நேற்று முன்தினம் இரவு சமயசங்கிலி பகுதியில் சாயக்கழிவுநீர் நுரையுடன் வெளியேற்றப்பட்டது. இதை அப்பகுதியை சேர்ந்த மக்கள், 'வீடியோ' எடுத்து மாவட்ட கலெக்டருக்கு புகாராக அனுப்பி உள்ளனர்.