/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் போலி பெண் ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி
/
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் போலி பெண் ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் போலி பெண் ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் போலி பெண் ஆர்.டி.ஓ., ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 11, 2025 01:18 AM
நாமக்கல், வங்கி உதவி மேலாளரை, ஆர்.டி.ஓ., எனக்கூறி திருமணம் செய்து கைது செய்யப்பட்ட தன்வர்த்தினியின் ஜாமின் மனுவை, நாமக்கல் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, பெரியமணலி அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29. இவர், வரகூராம்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், உதவி மேலாளராக பணிபுரிகிறார். இவருக்கும், நாமக்கல் ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்த்தினி, 29, என்பவருக்கும், 2024 ஜூன், 12ல், வையப்பமலையில் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது தன்வர்த்தினி பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக, அவரது பெற்றோர் கூறினர். ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களில், தன்வர்த்தினி பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நவீன்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து கடந்த, 26ல், தன்வர்த்தினியை கைது செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி, தன்வர்த்தினி வக்கீல்கள் மூலம், நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு கடந்த, 7ல், மாஜிஸ்திரேட் செகனாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மனு மீதான விசாரணையை வரும், 10ம் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
நேற்று மீண்டும் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஜிஸ்திரேட் செகனாபானு, தன்வர்த்தினியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தர்வர்த்தினியை போலீஸ் கஸ்டடி எடுக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். விசாரணை நடத்திய நீதிபதி செகனாபானு, இரண்டு நாள் போலீஸ் கஸ்டடிக்கு உத்தரவிட்டார். பின், தன்வர்த்தினியை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.