/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 03:09 AM
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். செயலாளர் பாலவிநாயகம், பொருளாளர் லோகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். உதவி செயற்பொறியாளர் நிலை பதவி உயர்வை, காலதாமதமின்றி வழங்க வேண்டும். வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.