/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரக்கன்றுகளுக்கு மூங்கில் கூண்டு அமைத்து பாதுகாப்பு
/
மரக்கன்றுகளுக்கு மூங்கில் கூண்டு அமைத்து பாதுகாப்பு
மரக்கன்றுகளுக்கு மூங்கில் கூண்டு அமைத்து பாதுகாப்பு
மரக்கன்றுகளுக்கு மூங்கில் கூண்டு அமைத்து பாதுகாப்பு
ADDED : பிப் 10, 2025 07:21 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில், கடந்தாண்டு கோடை காலத்தில் அதிக வெயில் காரணமாக, காரவள்ளி அடிவாரத்தில் உள்ள மூங்கில் மரங்கள் ஒன்றுக்கொன்று உரசி தீப்பிடித்து எரிந்தது. இதனால், 300 ஏக்கரில் வளர்ந்திருந்த மூங்கில், சவுக்கு உள்ளிட்ட மரங்கள் சாம்பலாகின. இதையடுத்து, வனத்துறை சார்பில், எரிந்த மரங்களுக்கு பதிலாக புதிதாக நீர் மருது, ஆல் அரசு, மலைவேம்பு, மகாகனி உள்ளிட்ட, 10 வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்த மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து வரும் நிலையில், காட்டுப்பன்றிகள் மரக்கன்றுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், கொல்லிமலை அடிவாரத்தில் புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் சேதமாகாமல் இருக்க, வனத்துறை சார்பில் மூங்கில் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.