sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

40 ஆண்டாக இன்ஸ்பெக்டர் இல்லாத அவலம் ஜேடர்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி

/

40 ஆண்டாக இன்ஸ்பெக்டர் இல்லாத அவலம் ஜேடர்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி

40 ஆண்டாக இன்ஸ்பெக்டர் இல்லாத அவலம் ஜேடர்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி

40 ஆண்டாக இன்ஸ்பெக்டர் இல்லாத அவலம் ஜேடர்பாளையம் பகுதியில் பாதுகாப்பு கேள்விக்குறி


ADDED : செப் 18, 2025 01:43 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார், ஊப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 40 ஆண்டாக இன்ஸ்பெக்டர் நியமிக்காததால், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையத்தில், 1985ல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் கரும்பு, வாழை, மரவள்ளிக்கிழங்கு விவசாயம் மற்றும் நெசவு தொழில் பிரதானமாக விளங்குகிறது. அணைக்கட்டில், அண்ணா பூங்கா மற்றும் இப்பகுதிக்கு உட்பட்ட, 52 கிராமங்கள் ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பகுதியில், 10க்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள், 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உள்ளன. மேலும், இப்பகுதியில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, இந்தியன் வங்கி, மீனவர் சங்கம், நெசவாளர் சங்கம் செயல்படுகின்றன. காவிரி கரையோர பகுதிகளான இப்பகுதியில் மீன் பிடி தொழில் சிறந்து விளங்குகிறது.

ஆனால், ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை, 40 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது. பரமத்தி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரே, ஜேடர்பாளையம் ஸ்டேஷனை கவனித்து வருகிறார். ஜேடர்பாளையம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சோழசிராமணி பகுதி மக்கள், 25 கி.மீ., துாரத்தில் உள்ள பரமத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டரை சந்திக்கும் நிலையில் உள்ளனர்.

கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜேடர்பாளையத்தில் தீ வைப்பு சம்பவம், வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு சம்பவங்கள் அரங்கேறின. இதை தடுக்க, கோவை மண்டல போலீசார், 450 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தளவுக்கு பதற்றம் நிறைந்த பகுதியான ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், நிரந்தர இன்ஸ்பெக்டர் இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பொதுமக்கள், தங்களது புகாரை தெரிவிக்க, 12 கி.மீ., துாரம் உள்ள பரமத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியுள்ளது.

மேலும், போலீசாரும் வழக்கு சம்பந்தமாக இன்ஸ்பெக்டரை சந்திக்க பரமத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும்பொது போலீஸ் ஸ்டேஷனில் வரும் குற்றங்களை விசாரிக்க கூட போலீசார் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், இன்ஸ்பெக்டர் அனுமதி கையெழுத்துக்காக எப்.ஐ.ஆர்., மற்றும் இதர கோப்புகள் கிடப்பில் உள்ளன.

கொலை, இறப்பு, விபத்து, கொள்ளை போன்ற கடும் குற்றங்களை இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்பதே விதி. தற்போது மக்கள் தொகை அதிகரிப்பின்படி குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் எஸ்.ஐ., தரத்தில் உள்ள, 280 போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. ஒரு இன்ஸ்பெக்டருக்கு, இரண்டு போலீஸ் ஸ்டேஷன்கள் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும்

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு அந்தஸ்தில் எஸ்.ஐ., தரத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் தரத்திலான ஸ்டேஷன்களாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடத்தை நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, 52 கிராம மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:

ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக இன்ஸ்பெக்டரை நியமித்தால் இப்பகுதி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். காவல்துறை அதிகாரிகளை சந்திக்க நீண்ட தொலைவு செல்ல வேண்டி இருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது புகார்களை சொல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. நீண்ட காலமாக கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us