/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள் தயார்
/
வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகள் தயார்
ADDED : அக் 21, 2024 07:27 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார், மதியம்பட்டி வழியாக திருமணிமுத்தாறு செல்கிறது. சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், தற்போது திருமணிமுத்தாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் வெண்ணந்துார் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் தண்ணீர், வெண்ணந்துார் ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கு செல்லும் வகையிலும் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஏரிகளுக்கு அதிக அளவில் செல்லும் தண்ணீரை கட்டுப்படுத்தும் வகையில் கால்வாய், மதியம்பட்டி பகுதி கால்வாயில் இருந்து ஏரிக்கு செல்லும் தண்ணீரை கட்டுப்படுத்தும் வகையில், 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.