/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மேயர் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக கூறி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
/
மேயர் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக கூறி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
மேயர் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக கூறி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
மேயர் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக கூறி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : நவ 22, 2024 01:30 AM
மேயர் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக
கூறி துாய்மை பணியாளர்கள் போராட்டம்
நாமக்கல், நவ. 22-
மேயர், கமிஷனர் ஆகியோரின் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக கூறி, நாமக்கல் மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி அலுவலக மெயின் கேட் முன், மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், அரசு அறிவிப்பின்படி குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோரிக்கை விளக்க கூட்டம் நடத்தினர். அப்போது திடீரென, மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் கூட்டமாக, மாநகராட்சி அலுவலகத்தில் நுழைய முயன்றனர். சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் அவர்களை தடுத்து நிறுத்தினார். அங்கிருந்த போலீசார், பணியாளர்களை சமாதானப்படுத்தி மாநகராட்சி அலுவலக நுழைவாயில் கேட்டை பூட்டினர். பின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து துாய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சுந்தரமூர்த்தி, பொதுச்செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் பேசினர். பின், சுந்தரமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாநகராட்சி மேயர், துணை மேயர், கமிஷனர், சுகாதார அலுவலர் ஆகியோரின் வீடுகளுக்கும், அவர்களுக்கு சொந்தமான இடங்களுக்கும், மாநகராட்சியின் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை வேலைக்காக பயன்படுத்தப்படுகின்றனர். குப்பையில் கிடக்கும் இரும்பு பொருட்களை கழுவி, பழைய இரும்பு கடையில் விற்று, விற்பனை செய்த பணத்தை கொடுக்கா விட்டால் வேலை வழங்கமாட்டோம் என மிரட்டுகின்றனர். துாய்மை பணியாளர்கள் விடுமுறை எடுத்தால், அலுவலர்களுக்கு, 100, 200 ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த நாள் வேலை கிடையாது என கூறுகின்றனர். மேலும் பெண் துாய்மை பணியாளர்களிடம் தகாத வார்த்தையால் பேசுகின்றனர். இவ்வாறு கூறினார்.