ADDED : மே 17, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், கல்யாண விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
இதேபோல், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கத்தேரி சமத்துவபுரம் அருகே உள்ள சிவபுரம் சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.