/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சோலார் மூலம் 400 யூனிட்டிற்கு ரூ.919 சேமிப்பு மாவட்டத்தில் 13,908 இணைப்பு வழங்க இலக்கு
/
சோலார் மூலம் 400 யூனிட்டிற்கு ரூ.919 சேமிப்பு மாவட்டத்தில் 13,908 இணைப்பு வழங்க இலக்கு
சோலார் மூலம் 400 யூனிட்டிற்கு ரூ.919 சேமிப்பு மாவட்டத்தில் 13,908 இணைப்பு வழங்க இலக்கு
சோலார் மூலம் 400 யூனிட்டிற்கு ரூ.919 சேமிப்பு மாவட்டத்தில் 13,908 இணைப்பு வழங்க இலக்கு
ADDED : செப் 13, 2025 01:36 AM
நாமக்கல், ''சோலார் பேனல் அமைப்பதன் மூலம், ஒரு யூனிட்டிற்கு, 919 ரூபாய் சேமிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில், 13,908 இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு மின் பகிர்மான கழக, மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
'பிரதான் மந்திரி சூர்யா கர் முப்ட் பிஜிலி யோஜனா' என்பது இந்திய அரசு, வீடுகளின் கூரைகளில், சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம், மாதந்தோறும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கவும், சூரிய சக்தியை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்ட திட்டம். இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
வீட்டின் கூரையில் சோலார் மின்சக்தி அமைப்புகளை நிறுவ மானியம் வழங்குவது; ஒவ்வொரு மாதமும், 300 யூனிட் வரை இலவச மின்சாரத்தை வழங்குவது; இந்தியாவில் சூரிய சக்திக்கு மாறுவதற்கும், நிகர பூஜ்ஜிய இலக்குகளை எட்டுவதற்கும் மக்களை ஊக்குவிப்பது இதன் திட்டம்.
இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 13,908 இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1,600 பேர் இணைப்பு பெற்றுள்ளனர். ஒரு கிலோ வாட்டிற்கு 30,000 ரூபாய், இரண்டு கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாய், மூன்று கிலோ வாட்டிற்கு, 78,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கான மானியம், நுகர்வோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணிகள் முடிந்த, ஏழு நாட்களில் இருந்து, 30 நாட்களுக்கள் செலுத்தப்படும். ஒரு கிலோ வாட் சூரிய தகடு மூலம், ஒரு நாளில், 4 முதல், 5 யூனிட்டு வரை மின் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த திட்டத்தை அமைப்பதன் மூலம், ௪௦௦ யூனிட்டிற்கு, 919 ரூபாய், 500 யூனிட், 1,240 ரூபாய், 600 யூனிட், 1,495 ரூபாய் வரை சேமிக்கலாம். குறிப்பாக, அதிகளவில் சோலார் பேனல் நிறுவும் கிராம பஞ்.,களுக்கு, ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.