/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் பள்ளி பஸ்கள் ஆய்வு 23 வாகனம் தகுதியற்றதாக அறிவிப்பு
/
ராசிபுரத்தில் பள்ளி பஸ்கள் ஆய்வு 23 வாகனம் தகுதியற்றதாக அறிவிப்பு
ராசிபுரத்தில் பள்ளி பஸ்கள் ஆய்வு 23 வாகனம் தகுதியற்றதாக அறிவிப்பு
ராசிபுரத்தில் பள்ளி பஸ்கள் ஆய்வு 23 வாகனம் தகுதியற்றதாக அறிவிப்பு
ADDED : மே 16, 2025 01:54 AM
ராசிபுரம், ராசிபுரம் வட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளி பஸ்கள் தனியார் பள்ளி மைதானத்தில் ஆய்வு செய்யும் பணி நேற்று நடந்தது.
பள்ளி வாகனங்களில் இருக்கை வசதி, வாகனத்தின் காப்பீடு காலம், தீயணைப்பு கருவி, முதலுதவி கருவிகள், வேகக்கட்டுபாட்டு கருவி, வாகனத்தின் முன்புறம், பின்புறம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், அவசர கால கதவுகள் மற்றும் ஜன்னல்கள், பேருந்தின் தளம், பள்ளி குழந்தைகளுக்கான இருக்கை வசதிகள், பள்ளி குழந்தைகள் புத்தகப்பை வைக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 250 பள்ளி பஸ்கள் ஆய்வு செய்ததில், 23 பஸ்கள் மட்டும் பொதுசாலைகளில் இயங்கும் தகுதி இல்லாததால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
குறிப்பிட்ட குறைகளை சரி செய்து, மே மாத இறுதிக்குள் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. நாமக்கல் வடக்கு ஆர்.டி.ஓ., முருகேசன், ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார், ராசிபுரம் தாசில்தார் சசிகுமார், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.