/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
/
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 10, 2025 10:31 AM

நாமக்கல்: 'பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்-தொகை பெற, மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, பிரதமரின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை ஆண்-டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லுாரிகளில், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும், மேற்கண்ட பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிய-ருக்கு, எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உத-வித்தொகை வழங்கப்படுகிறது.
இளங்கலை(தொழிற்படிப்பு), முதுகலை, பாலி-டெக்னிக், போன்ற பிற படிப்பு பயிலும் மாணவர்-களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26ம் கல்வியாண்டில், மேற்படிப்பு கல்வி உதவித்-தொகை திட்டத்திற்கு, மாணவ மாணவியருக்கு, கல்லுாரி மூலம் வழங்கப்பட்டுள்ள யு.எம்.ஐ.எஸ்., எண் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
வரும், 31 கடைசி நாள். விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்-பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ-லரை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

