/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிழற்கூடத்தில் அமர முடியாமல் பள்ளி மாணவர்கள் அவதி
/
நிழற்கூடத்தில் அமர முடியாமல் பள்ளி மாணவர்கள் அவதி
ADDED : அக் 10, 2025 02:00 AM
நாமகிரிப்பேட்டை,
நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் நிழற்கூடத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர்.
நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கிராமப்பகுதியில் உள்ள பள்ளி என்பதால், இப்பகுதியை சுற்றியுள்ள குக்கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி நுழைவு வாயில் அருகிலேயே பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் அடிக்கடி இல்லாததால், மாணவர்கள் வெயில், மழை காலங்களில் நிழற்கூடத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
ஆனால், நிழற்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சை சமூக விரோதிகள் உடைத்து சென்றுவிட்டனர். இதனால், நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவர்கள் நிழற்கூடத்தில் உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி அருகில் உள்ள நிழற்கூடத்தில் மாணவர்கள் உட்கார வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.