/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் விற்ற மளிகை கடைகளுக்கு 'சீல்'
/
போதைப்பொருள் விற்ற மளிகை கடைகளுக்கு 'சீல்'
ADDED : அக் 02, 2024 02:01 AM
போதைப்பொருள் விற்ற
மளிகை கடைகளுக்கு 'சீல்'
நாமகிரிப்பேட்டை, அக். 2-
நாமகிரிப்பேட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில், நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், டவுன் பஞ்., துாய்மை அலுவலர் லோகநாதன், நாமகிரிப்பேட்டை இன்ஸ்பெக்டர் அம்பிகா ஆகியோர் கொண்ட குழுவினர், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, ஆர்.பி., காட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, தணிக்கை செய்தனர். இந்த சோதனையில், 3 கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் உத்தரவுப்படி, 3 கடைகளுக்கும், 'சீல்' வைக்கப்பட்டது. மேலும், 75,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடை, ஹோட்டல், பேக்கரி போன்ற கடைகளில் காலாவதியான பொருட்கள் பயன்படுத்தப்படு
கிறதா என, சோதனை செய்தனர்.