/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'இல்லம் தேடி கல்வி' குறித்து இரண்டாம் பருவ பயிற்சி முகாம்
/
'இல்லம் தேடி கல்வி' குறித்து இரண்டாம் பருவ பயிற்சி முகாம்
'இல்லம் தேடி கல்வி' குறித்து இரண்டாம் பருவ பயிற்சி முகாம்
'இல்லம் தேடி கல்வி' குறித்து இரண்டாம் பருவ பயிற்சி முகாம்
ADDED : அக் 11, 2025 01:16 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவுப்படி, 'இல்லம் தேடி கல்வி' குறித்த இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி முகாம், நாமக்கல் வட்டார வளமையத்தில் நேற்று நடந்தது. மாநில அளவில் நடந்த பயிற்சியில் பங்கேற்ற செந்தில், வெங்கடாஜலம், மனோகரன் ஆகியோர், மாவட்ட கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்சியளித்தனர். இதில், 15 வட்டாரங்களில் இருந்தும், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியில், முன்னறி தேர்வு, கற்றல் விளைவு, குழு செயல்பாடு, தனி நபர் செயல்பாடு, உங்களுக்கு தெரியுமா, அறிந்து வா மற்றும் அடைவு திறன் அட்டவணை போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியானது, வட்டார அளவில் உள்ள, 416 மையங்களின் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும். ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, முன்னணி தன்னார்வலர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.