/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்கன்வாடி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி
/
அங்கன்வாடி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி
அங்கன்வாடி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி
அங்கன்வாடி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி
ADDED : அக் 11, 2025 01:17 AM
நாமக்கல், தேசிய ஊட்டச்சத்து மாதம், செப்., 17 முதல், வரும், 16 வரை, மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், மாவட்ட அளவிலான முன்பருவ கல்வி பயிலும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி, நாமக்கல் மலையாண்டி தெரு தொடக்கப்பள்ளியில் நடந்தது. மாவட்ட திட்ட அலுவலர் போர்ஷியாரூபி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் கிருத்திகா வரவேற்றார். மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யாலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று, பல்வேறுவிதமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகளை சிறப்பாக செய்து காண்பித்தனர். போட்டியில், மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை சேர்ந்த, 2 முதல், 6 வயது வரையிலான குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குழந்தைகளின் செயல்பாட்டை பாராட்டி சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.