/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இரண்டாம் பருவ மதிப்பீடு பயிற்சி
/
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இரண்டாம் பருவ மதிப்பீடு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இரண்டாம் பருவ மதிப்பீடு பயிற்சி
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இரண்டாம் பருவ மதிப்பீடு பயிற்சி
ADDED : அக் 18, 2025 01:28 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், இல்லம் தேடி கல்வி இரண்டாம் பருவ மதிப்பீடு பயிற்சி நடந்தது.
மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் முக்கியத்துவம் கொடுத்து, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் சிறப்பு திட்டமான, இல்லம் தேடி கல்வி மூலம் தொடக்க கல்வி மாணவர்களின் கற்றல் அடைவுத்திறனை மேம்பாடுத்துவதற்காக, அவ்வப்போது பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
கல்வியாண்டின் இரண்டாம் பருவத்தில், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்வதற்காக ஒன்றியத்தில் உள்ள, 110 தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான மதிப்பீடு பயிற்சி, நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் நடந்தது.பயிற்சியை வட்டார வள மேற்பார்வையாளர் செண்பகவடிவு துவக்கி வைத்து பேசினார். பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் சென்றாய பெருமாள், முருகேசன், லதா மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் மதிப்பீடு சார்ந்த தெளிவுரைகளை வழங்கினர். வட்டார கல்வி அலுவலர்கள் கோபால கிருஷ்ணமூரத்தி, கிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.