/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்
/
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : மார் 01, 2024 04:06 AM
நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட தலைவர் தமிழ்தென்றல் இசைவாணன் தலைமையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நான்காம் நாளாக போராட்டம் நடந்தது.
காலை, 10:00 மணியில் இருந்து மாலை, 5:00 மணி வரை நடந்த போராட்டத்தில், சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியான, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு, சமவேலைக்கு சம ஊதியம் என்பதை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதற்காக போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.

