/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கலந்தாய்வில் பாரபட்சம் இடைநிலை ஆசிரியர் தர்ணா
/
கலந்தாய்வில் பாரபட்சம் இடைநிலை ஆசிரியர் தர்ணா
ADDED : ஜூன் 26, 2025 01:38 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், கொடிக்கால்புதுார் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு இடைநிலை ஆசிரியருக்கான காலி பணியிடத்துக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக, தற்போது ஆசிரியர்களிடம் இருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கொடிக்கால்புதுார் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு, வெளிமாவட்டத்தில் இருந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளாத ஆசிரியருக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: எருமப்பட்டி யூனியனில், 10க்கும் மேற்பட்ட உபரி ஆசிரியர்கள் உள்ளனர். இதில், இரண்டு காலி பணிடங்கள் மட்டுமே உள்ளன. இதில் ஒரு காலி பணியிடத்தை, கலந்தாய்வின்றி வெளி மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியருக்கு வழங்குகின்றனர்.
இதனால், எருமப்பட்டி ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். எருமப்பட்டி யூனியனில் நிர்வாக இடமாறுதல்
என்ற பெயரில் கலந்தாய்வில் விலை பேசப்படுகிறது.
கொடிக்கால்புதுார் பள்ளிக்கு இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு நிர்வாக மாறுதல் வழங்கியுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, நேற்று இரவு எருமப்பட்டி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இவ்வாறு அவர் கூறினார்.