/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூகுள் மேப் யாருக்கெல்லாம் உதவி செய்யுதுன்னு பாருங்க; ஏ.டி.எம்., கொள்ளையில் அதிர்ச்சி
/
கூகுள் மேப் யாருக்கெல்லாம் உதவி செய்யுதுன்னு பாருங்க; ஏ.டி.எம்., கொள்ளையில் அதிர்ச்சி
கூகுள் மேப் யாருக்கெல்லாம் உதவி செய்யுதுன்னு பாருங்க; ஏ.டி.எம்., கொள்ளையில் அதிர்ச்சி
கூகுள் மேப் யாருக்கெல்லாம் உதவி செய்யுதுன்னு பாருங்க; ஏ.டி.எம்., கொள்ளையில் அதிர்ச்சி
UPDATED : செப் 27, 2024 10:34 PM
ADDED : செப் 27, 2024 04:58 PM

நாமக்கல்: ''வட மாநில கொள்ளையர்கள், கூகுள் மேப் உதவியுடன் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களை கண்டறிந்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது,'' என டி.ஐ.ஜி., உமா கூறினார்.
கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.,களில் கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட போலீசார் துப்பாக்கி முனையில் சுட்டு பிடித்தனர். அதில், கொள்ளையன் ஒருவன் உயிரிழந்தான்.
இது தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா கூறியதாவது: கொள்ளையர்கள் அனைவரும் திருச்சூரில் காரில் சென்று தான் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் லாரியில் மாறி வந்துள்ளனர். அந்த லாரி வழக்கமாக செல்லும் லாரிதான். கொள்ளைக்கு பின் மேற்கு மண்டலம் முழுதும் உஷார்படுத்தப்பட்டது. போலீசார் வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால் சந்தேகம் ஏற்பட்டது. குமாரபாளையம் சாலையில் லாரி நிற்காமல் சென்றது. நெப்படை நோக்கி திரும்பிய லாரி விபத்தை ஏற்படுத்தியது. போலீசார் துரத்தி பிடித்ததில், அது கேரளாவில் இருந்து வந்தது தெரியவந்தது.
கன்டெய்னரில் இருந்த காரை வைத்து தான் ஏ.டி.எம்., கொள்ளை கும்பல் என கண்டறிந்தோம். அதன்பேரில் தான் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது நடந்த தாக்குதலில் கொள்ளையன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். திட்டமிட்டு என்கவுன்டர் நடக்கவில்லை. போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு ஓடும்போது பாதுகாப்புக்காக சுட்டோம். இறந்தவர்கள் பெயர் ஜமாலூன்; பிடிபட்ட 7 பேரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களை குறிவைத்து கூகுள் மேப் உதவியுடன் கொள்ளையடித்து உள்ளனர்.புலன் விசாரணைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
இதனிடையே, குமாரபாளையத்தில் என்கவுன்டர் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ததனர்.