/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மண் கடத்திய லாரி பொக்லைன் பறிமுதல்
/
மண் கடத்திய லாரி பொக்லைன் பறிமுதல்
ADDED : பிப் 09, 2025 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை யூனியன், மங்களபுரம் பஞ்சாயத்தை ஒட்டி-யுள்ள பகுதிகளில் சட்டத்துக்கு விரோதமாக மண் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், நேற்று மங்களபுரம் அருகே மூலக்காடு பகுதியில், டிப்பர் லாரிகளில் மண் அள்ளிக்-கொண்டு வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்-வதாக, அப்பகுதியினர் மங்களபுரம் போலீசாருக்கு தகவல் தெரி-வித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அவர்-களை கண்டதும், மண் அள்ளும் கும்பல் வாகனங்களை விட்டு-விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து, மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கும்பலை, வலை வீசி தேடி வருகின்றனர்.

