/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு
ADDED : செப் 22, 2024 06:35 AM
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் அருகே, ஆர்.புதுப்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. இதில், பள்ளியின் பல்வேறு பணிகள் குறித்த விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் அர்த்தனாரி தலைமை வகித்தார். மேலாண்மைக்குழு தலைவராக ரம்யா மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய உறுப்பினர்களுக்கு புதுப்பட்டி டவுன் பஞ்., தலைவர் சுமதி சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
பள்ளியின் கட்டமைப்பு மற்றும் இதர மேம்பாட்டு பணிகளுக்கு தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் விபரங்களை, 'நம்ம பள்ளி' செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், இத்திட்டத்தின் விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் பள்ளிக்கல்வி இடைநிற்றலுடன் இருக்கும் மாணவர்களுக்கான, இதர உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.கூட்டத்தில், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.