/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் நவீன புற்றுநோய் சிகிச்சை கருத்தரங்கு

ADDED : செப் 05, 2024 02:45 AM
நாமக்கல்: இந்தியா மற்றும் ஜப்பான் மருத்துவ நிறுவனங்கள் இணைந்து, சர்வதேச அளவிலான நவீன புற்றுநோய் சிகிச்சை கருத்தரங்கை, நாமக்கல் தங்கம் மருத்துவமனையில் நடத்தின.
டாக்டர்கள் பிரபா யாதவ், ரீகோ சுகுரா ஆகியோர் கலந்து கொண்-டனர். ஜப்பான் நாட்டின், நிணநீர் தேக்க வீக்க பன்னாட்டு மையத்தின் ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் விசாவோ கோசிமா, வீடியோ கான்பரன்ஸ் மூலம், 'லிம்பீடிமா'வுக்கு (நிணநீர் தேக்க வீக்கம்) வழங்கப்படும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். ஜப்பான் நிணநீர் தேக்க வீக்க பன்னாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற டாக்டர் சச்சின் சாவ்ரே நிணநீர் வீக்கத்திற்கான நவீன மைக்ரோ வாஸ்குலர் சிகிச்சை பற்றியும், அதை தங்கம் புற்-றுநோய் சிகிச்சை மையத்தில், நவீன முறையில் மிகவும் எளிதாக செய்யப்படுவது குறித்தும் பேசினார்.
கருத்தரங்கில், பல்வேறு மாநிலம், நாடுகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.