/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விழுப்புரம் மாவட்டத்துக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு
/
விழுப்புரம் மாவட்டத்துக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு
விழுப்புரம் மாவட்டத்துக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு
விழுப்புரம் மாவட்டத்துக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு
ADDED : டிச 06, 2024 07:36 AM
ராசிபுரம்: மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு, 10 லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலுார் மாவட்ட மக்களுக்கு, 68.87 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், கலெக்டர் உமா, நகராட்சி சேர்மன் கவிதா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 10 லாரிகள் மூலம் மொத்தம், 68.87 லட்சம் ரூபாய் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகை பொருட்கள், பால் பவுடர், சர்க்கரை, ரொட்டி, சோப், தீப்பெட்டி, பக்கெட் உள்ளிட்ட பல்வேறு வகையான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். லாரிகளை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.