/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் துார்வாரும் பணி துவக்கம்
/
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் துார்வாரும் பணி துவக்கம்
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் துார்வாரும் பணி துவக்கம்
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளம் துார்வாரும் பணி துவக்கம்
ADDED : அக் 10, 2024 02:00 AM
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில்
தெப்பக்குளம் துார்வாரும் பணி துவக்கம்
சேந்தமங்கலம், அக். 10-
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை, கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
சேந்தமங்கலத்தில், 1,000 ஆண்டு பழமையான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் முன் அமைந்துள்ள தெப்பக்குளத்தில், கோவில் திருவிழாவின் போது முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி தெப்பம் விடும் நிகழ்ச்சி, கடந்த, 60 ஆண்டுக்கு முன் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது.
இந்த விழாவை காண சேலம், நாமக்கல், காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டு வருவர். நாளடைவில் கோவில் தெப்பக்குளத்தில் சேந்தமங்கலம் டவுன் பஞ்., மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளின் கழிவுநீர் கலந்து குட்டையாக மாறியது. இதனால், தெப்பம் விடும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், சட்டசபை பொது கணக்கு குழுவினர் வந்தனர். அவர்களிடம், காங்., கட்சி சார்பில் குளத்தை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. குளத்தை ஆய்வு செய்த பொது கணக்கு குழுவினர், தெப்பக்குளத்தை பராமரிக்க, 1.34 கோடி ரூபாய் ஒதுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், டவுன் பஞ்., மூலம், 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, முதற்கட்ட பணியாக தெப்பக்குளத்தை துார்வாரும் பணி நடக்கிறது.