/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக செந்தில் கல்வி குழும செயலர் பதவியேற்பு

ADDED : ஜன 19, 2025 06:54 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள, பால தண்டாயுத-பாணி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க, அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தை சேர்ந்த, 5 பேர், உறுப்பினர்களாக, கடந்த, 10ல் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பதவி ஏற்பு விழா, பழநி மலை அடிவாரத்தில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில், இணை கமிஷனர் முன்னிலையில், நேற்று முன்தினம் நடந்தது.
அதில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள செந்தில் கல்வி குழும செயலர், செந்தில் குழும நிறுவன இணை மேலாண் இயக்குனர் தனசேகர், அறங்காவலர் உறுப்பினராக பதவி ஏற்றார். அவருடன், திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சுப்ரமணி, ஒட்டன்-சத்திரம் அன்னபூரணி, சின்ன கரட்டுப்பட்டி பாலசுப்ரமணியம், கதிரையன்குளம் பாலசுப்ரமணி ஆகியோரும் பதவியேற்றனர்.