ADDED : ஜூலை 16, 2026 04:20 AM
சேந்தமங்கலம்:கொல்லிமலையில் உள்ள ரேஷன் கடைகளில் ஏற்படும், 'சர்வர்' பிரச்னையால், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
நாமக்கல்
மாவட்டம், கொல்லிமலையில், 14 ஊராட்சி பகுதிகளிலும், 'சிக்னல்'
சரியாக கிடைக்காததால், புதிதாக மொபைல் போன் கோபுரம் அமைக்க வேண்டும்
என, மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதை தொடர்ந்து, இரண்டு
ஆண்டுகளுக்கு முன், கொல்லிமலை சுற்று வட்டாரத்தில், 13 இடங்களில்
மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும், திண்ணனுார் நாடு,
தேவனுார் நாடு, சேலுார் நாடு போன்ற கிராமங்களில் மொபைல் போன் சிக்னல்
இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என, அப்பகுதி மக்கள்
கூறுகின்றனர்.
சிக்னல் முழுமையாக கிடைக்காத காரணத்தால்,
அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில், 'சர்வர்' பிரச்னை காரணமாக மலைவாழ்
மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் மலைவாழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
