ADDED : நவ 07, 2025 01:05 AM
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் அடுத்த சர்க்கார் நாட்டாமங்கலம், தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாசம் மகன் ராஜரத்தினம், 56. இவரது மனைவி, 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
மகன் வெளியூரில் படித்து வருகிறார். மகள் ஸ்ரீவர்சினி, 22 மாற்றுத்திறனாளி மற்றும் மன
வளர்ச்சி குன்றியவர். இவர் வீட்டில் வீல் சேரில்தான் உள்ளார். இவரை பராமரிப்பதற்காக வி.ஆர்.எஸ்.,ல் ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீவர்சினியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு உணவு வாங்க குருசாமிபாளையம் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம், 60, ஸ்ரீவர்சினிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து ராஜரத்தினம் அளித்த புகார்படி, புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான வெங்கடாஜலத்தை தேடி வருகின்றனர்.

