/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தம்பதியர் இடையே தகராறு தீக்குளித்து மனைவி விபரீத முடிவு
/
தம்பதியர் இடையே தகராறு தீக்குளித்து மனைவி விபரீத முடிவு
தம்பதியர் இடையே தகராறு தீக்குளித்து மனைவி விபரீத முடிவு
தம்பதியர் இடையே தகராறு தீக்குளித்து மனைவி விபரீத முடிவு
ADDED : நவ 07, 2025 01:05 AM
ராசிபுரம், ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் மரியம்மன் கோவில் பின் பகுதியை சேர்ந்தவர் மணிவேல், 40, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி யசோதா, 38. இவர்களுக்கு, 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, மணிவேல் புதிதாக வீடு கட்டிய வகையில் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று, சிங்களாந்தபுரம் மாரியம்மன் கோவில் விழாவில் பொங்கல் வைக்க யசோதா சென்றுள்ளார். மதியத்திற்கு மேல் வீட்டுக்கு வந்தவுடன் தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் அங்கிருந்த, 5 லிட்டர் மண்ணெண்ணெயை ஊற்றி யசோதா தீ வைத்துக் கொண்டார். தடுக்க சென்ற மணிவேல் மீதும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் யசோதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த மணிவேல், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பேளுக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

