ADDED : ஆக 19, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே, பள்ளக்குழி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 57; இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 12ல் மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அதிகாரி அசோக் மற்றும் மல்லசமுத்திரம் எஸ்.ஐ., ரஞ்சித்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டதில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த, இரண்டு கடைகளுக்கும் கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று அதிகாரிகள், 'சீல்' வைத்து ஒவ்வொரு கடைக்கும், தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.