/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு ரூ.4,500 அபராதம்
/
பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு ரூ.4,500 அபராதம்
பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு ரூ.4,500 அபராதம்
பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு ரூ.4,500 அபராதம்
ADDED : டிச 29, 2025 07:22 AM
நாமகிரிப்பேட்டை: தமிழக அரசு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்ப-டுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் டம்-ளர்கள் போன்றவற்றுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபா-டில்லை.
இதனால், நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., பகுதி-களில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்-கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அலுவலர் யோகேஸ்வரன் மற்றும் துப்புரவு மேற்பார்வை-யாளர் காளியப்பன் தலைமையிலான ஊழி-யர்கள், நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வில் ஈடுபட்டனர்.இவர்கள், ஆத்துார் பிரதான சாலை, புதுப்பட்டி சாலை, கடைவீதி, அரியாகவுண்டம்பட்டி ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள் விற்கப்ப-டுகிறதா என ஆய்வு நடத்தினர். இந்த சோத-னையின் போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த, 6.5 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக்குகள் அதிகாரி-களால் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்-பனை செய்த, 8 கடைகளின் உரிமையாளர்க-ளுக்கு, மொத்தம், 4,500 ரூபாய் அபராதம் விதிக்-கப்பட்டு உடனடியாக வசூல் செய்யப்பட்டது.
இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

