/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் பலி
/
சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவர் பலி
ADDED : டிச 29, 2025 07:21 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், நஞ்சப்ப முதலியார் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 62. இவர் நேற்று முன்-தினம் இரவு, 10:30 மணிக்கு, தாரமங்கலம் - ஜல-கண்டாபுரம் சாலையை கடந்து, ஹோட்டலுக்கு செல்ல முயன்றார். அப்போது, தாரமங்கலத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன், ஹெல்மெட் அணி-யாமல், 'பல்சர்' பைக்கை ஓட்டிவந்து, ராஜேந்-திரன் மீது மோதினான். இதில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்தார்.
அவரை மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பினர். அங்கு நேற்று காலை, அவர் உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த, 17 வயது சிறுவ-னுக்கு கையில் காயம் ஏற்பட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாரமங்கலம் போலீசார் விசாரணையில், சிறுவன் ஓட்டி வந்த பைக்கில், மற்றொரு சிறுவன் அமர்ந்து வந்ததும் தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

